நீட் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு
ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிபிஎஸ்இ அறிவிப்பின் படி மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளை அணிய வேண்டும். பூ வைக்கக் கூடாது. பெரிய பட்டன் கொண்ட ஆடைகளை அணியக் கூடாது. ஹெல்த் பேண்ட், பேட்ஜ் அணியக்கூடாது. ஹீல்ஸ் இல்லாத சாதாரண வகை செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும்.
ஷூ சாக்ஸுக்கு அனுமதி கிடையாது. தொலைத் தொடர்பு சாதனங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ் கைப்பைகள் அனுமதியில்லை. வாட்ச் பெல்ட் தொப்பி அணியக் கூடாது. நகைகள் தலையில் க்ளிப் தண்ணீர் பாட்டில் உணவுப் பொருட்கள் போன்றவற்றையும் எடுத்துச்செல்லக் கூடாது.
2017ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன டிஐஎஸ்கே ஆங்கிலப் பள்ளியைச் சேர்ந்த ஷிஜா ஷபீனா பிந்து ஷகினா ஆகிய நான்கு ஆசிரியைகளும் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here