மாத ஊதியதாரர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை!

பெங்களூர்: கர்நாடகவில் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவன ஊழியர் வருமான வரி செலுத்துவதில் இருந்து  தப்பிக்க வருமானத்தை குறைத்தும் வரிவிலக்குகள் பிடித்தங்களை அதிகரித்து காட்டி வரி தாக்கல் செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.மேலும் மும்பை, பெங்களூர், லூதியானா போன்ற நகரங்களில் நடைபெற்ற ஆய்வில் மாத வருமானம் பெரும் ஊழியர்கள் சொத்து இல்லாமல் அதற்கு சலுகைகளைக் பெற்றது நன்கொடை கொடுக்காமல் கொடுத்ததாக கணக்கு காட்டி வரிச்சலுகை பெற்றது அம்பலமாகியுள்ளது.இவ்வாறு தவறான கணக்கு காண்பித்து வரி செலுத்துவது சட்டப்படி குற்றமாகும் என வரித்துறை எச்சரித்துள்ளது. இவ்வாறு தாக்கல் செய்யப்படும் கணக்குகளை தொழில்நுட்ப உதவியுடன் கண்டு பிடித்து உரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here