கீர்த்திக்கு அப்பாவாக நடிக்கிறார் லிவிங்ஸ்டன்!

சென்னை: நடிகர் விஜய்யின் 62ஆவது படத்தின் படப்பிடிப்பு சிறப்பு அனுமதி
வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. விவசாயத்தின் அவசியத்தை உணரும் வகையில் உருவாகும் இப்படத்தில் வரலட்சுமி அரசியல்வாதியாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகின.இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். அவருக்குத் அப்பாவாக நடிகர் லிவிங்ஸ்டன் நடிக்க உள்ளார்.
இவருடைய நடிப்பில் தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம் பேரன்பு போன்ற படங்கள் தயாரகி வருகின்றன. இதையடுத்து விஜய் 62 படத்தில் இணைந்துள்ளார்.
இவருடைய மகள் ஜோவிதா தமிழ் திரையுலகில் கலாசல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். விஜய் ஜோவிதாவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் லிவிங்ஸ்டன் நடிகர் விஜயுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here