மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஒரு மாதக் குழந்தை! 5 மணிநேரத்தில் அதிரடியாக மீட்பு!!

டெல்லி: டெல்லி கல்யாண்புரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை பரிசோதனைக்காக தம்பதியினர் வந்தனர். கணவர் வரிசையில் காத்திருந்தபோது அவரது மனைவி படிக்கட்டில் குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு பெண் குழந்தையின் தாயிடம் சிநேகமாக பேசியதையடுத்து அந்த பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ஓய்வறைக்குச் சென்றுள்ளார். அவர் திரும்பி வந்ததும் குழந்தையும் பெண்ணும் காணவில்லை.உடனே போலீசார் சிசிடிவி காட்சிப்பதிவுகளையும் தீவிரமாக ஆராய்ந்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான
இரு பெண்கள் குழந்தையுடன் வெளியேறுவது தெரிந்தது.மருத்துவமனையின் அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இரு பெண்களை ஆட்டோவில் கொண்டு சென்று விட்ட காஸிதாபாத் பகுதியின் கோடா காலனிக்கு ஆட்டோ டிரைவர் போலீசாரை அழைத்துச் சென்றார்.விசாரணையில் பூனம், ருச்சி ஆகிய இருவரும் சகோதரிகள் என்றும்பூனத்திற்கு திருமணம் ஆகி நான்கு வருடமாகியும் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. சிகிச்சைக்காக வந்த எங்களிடம் குழந்தையின் தாய் எங்களை நம்பி குழந்தையை
ஒப்படைத்துவிட்டு ஓய்வறைக்குச் சென்றார். அப்பெண் திரும்பிவருவதற்குள் நாங்கள் அங்கிருந்து நகர்ந்து மருத்துவமனையை விட்டு வெளியேறினோம்.உத்தரப்பிரதேச மாநிலத்தின் தன் சொந்த ஊரான எட்டாவாவுக்கு ஓடிப்போகத் திட்டமிட்டிருந்தோம் ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர் என்று கூறியுள்ளார்.போலீசார் விரைந்து செயல்பட்டு காணாமல் போன 5 மணிநேரத்திற்குள் குழந்தையை மீட்டுள்ளதுடெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here