தங்க ஷூ, தங்க டை!! மணமகன் விளக்கம்!!

லாகூர்: பாகிஸ்தானில் மணமகன் ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட ஷூ, டை ஆகியவற்றை அணிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார்.லாகூரை சேர்ந்தவர் ஹபிஸ் சல்மான் சாகித். இவரது தந்தை பிரபல தொழிலதிபர். தந்தைக்கு உதவியாக ஹபிஸ் இருந்துவருகிறார்.  அவர் திருமணம் கடந்தவாரம் லாகூரில் பிரமாண்டமாக நடந்தது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்கத்தால் செய்யப்பட்ட ரூ.17லட்சம் மதிப்புள்ள ஷூ, கிறிஸ்டல்கள் பதிக்கப்பட்ட ரூ.6லட்சம் மதிப்பு டை அணிந்து பங்கேற்றார் ஹபிஸ். மேலும், தங்க இழைகளுடன் கூடிய பட்டினால் ஆன கோட்சூட்டினை அணிந்திருந்தார்.                                                                                                 இது அனைவரையும் கவர்ந்தது.  இவரது  படங்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன.
இதுகுறித்து ஹபிஸ் கூறுகையில், எனது வீட்டுக்கு நான் ஒரே மகன். எனவெ பெற்றோர் எனக்கு இதுபோன்ற செல்வ செழிப்பான திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தங்கம், பணம் இவற்றை பலர் தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருப்பார்கள்.  அல்லது அவையிரண்டும் நமது கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் வகையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.                                                                        ஆனால், அவை எப்போதும் நமது முன் மண்டியிட வேண்டும். அதற்காக தங்க ஷூக்கள் அணிந்து உதாரணமாக காட்டியுள்ளேன். அவை நம்மை பெருமைப்படுத்த வேண்டுமே தவிர அவற்றின் பிடியில் நாம் இருக்க கூடாது. எனவே தங்கத்தால் ஆன டை கட்டி திருமணத்துக்கு வந்தேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here