மகள் என்று பாராமல் பலாத்காரம்! நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசம்: பெற்றமகளை சீரழித்த மிருகம் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூர சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் நடந்துள்ளது.
சீதாப்பூரை சேர்ந்த பெண் கணவரிடம் இருந்து பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். இப்பெண்ணுக்கு ஒரு மகனும் உள்ளார்.

கடந்த ஏப்.15ம் தேதி கமால்பூரில் உள்ள விழாவில் பங்கேற்க தந்தையுடன் அப்பெண் சென்றுள்ளார்.
அவர்களுடன் தந்தையின் நண்பர் மான்சிங் உடன் சென்றார்.
மான்சிங்கின் நண்பர் மீரஜ் என்பவர் வீட்டில் அப்பெண் அடைத்துவைக்கப்பட்டு மூவராலும் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அங்கிருந்து தப்பி வீட்டுக்குவந்த அப்பெண் தாயிடம் நடந்தவற்றைக்கூறி கதறியுள்ளார். பின் போலீசில் புகார் செய்துள்ளார். மீரஜ் கைது செய்யப்பட்டார்.மான்சிங் மற்றும் அப்பெண்ணின் தந்தை தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here