வைர வியாபாரியின் 12வயது மகன்!! ஜெயின் சாமியாராக துறவு பூண்டார்!!

சூரத்: ஜெயின் மதத்துறவியாக 12வயதில் துறவுபூண்டுள்ளார் வைரவியாபாரியின் மகன்.
சூரத் நகரை சேர்ந்த பிரபலவைர வியாபாரி தீபேஷ் ஷா.இவரது மகன் பாவ்யாஷா. துறவியாக வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயின் மதத்தின் தலைமை துறவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தங்கள் மதத்தின் துறவிகளுக்கு உரிய கடமைகள், பொறுப்புகளை சிறுவனுக்கு விளக்கினர்.
துறவியாக வேண்டுமென்ற முடிவில் தீபேஷ் ஷா உறுதியாக இருந்தார்.
சூரத் நகரில் இன்று அவர் துறவறம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அவர் சூரத் ஜெயின் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் குற்றங்களாக உள்ளன.எனவே துறவறம் ஏற்க முடிவுசெய்தேன். எனது சகோதரி 4ஆண்டுகளுக்கு முன் துறவறம் பூண்டார்.
எனது பெற்றோரும் ஒருநாள் துறவறம் ஏற்பார்கள் என்று பாவ்யாஷா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here