’விசில்போடு எக்ஸ்பிரஸ்’ உற்சாகத்துடன் கிளம்பியது!!

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களை புனேவுக்கு இலவசமாக விசில்போடு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் புனே அழைத்துச்சென்றுள்ளது சிஎஸ்கே அணி.

காவிரி வாரியம் தாமதிக்கப்பட்டு வருவதை கண்டித்து ஐபிஎல் போட்டிகளுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் இடம்மாற்றப்பட்டன.மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன.
இதற்காக ரசிகர்களை இலவசமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து இன்று காலை கிளம்பிய ரயிலில் சுமார் ஆயிரம் ரசிகர்கள் புனே சென்றனர். சில ரசிகர்கள் குடும்பத்துடனும் ரயிலில் சென்றுவருகின்றனர்.

வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதும் போட்டியை ரசிக்கின்றனர்.
புனேயில் உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலங்களுக்கும் அவர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். உணவு, உறைவிட வசதிகள் ரசிகர்களுக்கு இலவசமாக செய்து தரப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here