Connect with us

Uncategorized

ஏடிஎம்-களில் பணம் எடுக்க கட்டணம்!!

Published

on

மும்பை: ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக கட்டணம் செலுத்தும் திட்டம் விரைவில் வரவுள்ளது.
ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.பிற வங்கிகளின் ஏடிஎம்-ஐ வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது அதற்கான கட்டணத்தை வங்கியே செலுத்தி வருகிறது.
இதற்காக, பணம் எடுக்கப்படும்போது ரூ.15ம், பிற சேவைக்காக ரூ.5ம் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு மாதத்தில் ஐந்துமுறைக்கு அதிகமாக ஏடிஎம்-ஐ பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணம்வாபஸ் திட்டத்தின்போதே ஏடிஎம் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
தற்போது பணமே இல்லாமல் ஏடிஎம்கள் வறட்சியை சந்தித்தபோதும் அவற்றின் பராமரிப்பை கருத்தில் கொண்டு கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடாக உள்ளது.எனவே, ஏடிஎம் சேவைகளை பயன்படுத்த மிகவும் குறைந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்தே பெறலாமா என்று வங்கிகள் யோசனை செய்து வருகின்றன.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator