ஆக்‌ஷன் ஹீரோவாகிறார் விஜய் ஆண்டனி!

சென்னை: 2012ம் ஆண்டு வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக விஜய் ஆண்டனி அறிமுகமானார். தற்போது அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.இதை மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார்.நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் இந்த படம் ஆக்சன் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது.விஜய் ஆண்டனி நடித்த எல்லாப் படங்களுமே அவரது சொந்தத் தயாரிப்பு. தற்போது வேறொரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here