பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு! தமிழக அரசு நடவடிக்கை குறித்து ஐகோர்ட் கேள்வி!!

சென்னை: பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிர்பயா நிதி மூலம் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என வக்கீல் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.இது தொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ் தண்டபாணி விசாரணை செய்தனர். அப்போது வக்கீல் சூரியப்பிரகாசம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
குற்றங்களுக்கானதண்டனையை அதிகரிக்க வேண்டும். நிர்பயா நிதியைப் பெற்று அரசு பெண்களுக்கான பாதுகாப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கு அரசு பிளீடர் ராஜகோபாலன் ஆஜராகி பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செயின் பறிப்பு தனியாக வீடுகளில் உள்ள வயதான பெண்களைத் தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதும் அதிகரித்துள்ளது. இதற்காக அரசு ஏற்படுத்தியுள்ள கவுன்சலிங், விசாரணை போதுமானதாக இல்லை. பெண்களுக்கு எதிரான புகார்கள் மீது எத்தனை எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்குகள் மீது நடத்தப்பட்டுள்ள விசாரணையின் நிலை என்ன குற்றங்கள் நடக்காமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 6ம் தேதி தள்ளி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here