என்ன மாதிரியான சமூகம் இது! ஜனாதிபதி வேதனை!!

காஷ்மீர்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு அளிப்பது அனைத்து மக்களின் கூட்டுப்பொறுப்பு ஆகும் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்.
ஜம்மு நகரில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
8வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு மிகக் கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது. இதை நினைத்து நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்.
நாடு சுதந்திரம் அடைந்தபின்பும் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் பலஇடங்களில் தொடர்ந்து நடந்துவருவதை நினைத்து வெட்கமாக இருக்கிறது.என்ன மாதிரியான சமூகத்தை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் எந்த பெண்ணுக்கும், சிறுமிக்கும் இதுபோன்ற சம்பவங்கள், நடந்துவிடாமல் பாதுகாப்பு அளிப்பதும், அதை உறுதி செய்வதும் நமது கடமையாகும்.
இந்தியாவின் மகள்கள் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று சாதனைபுரிந்து வந்திருக்கிறார்கள்.நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், சிறுமிக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது, பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அனைவருக்குமான கூட்டுப்பொறுப்பாகும். நம்முடைய மகள்களைப் பாதுகாக்க நம் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here