பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு! மோடி வாய்திறக்க மன்மோகன்சிங் வலியுறுத்தல்!!

டெல்லி:பெண்களுக்கு எதிராக நடந்துவரும் அநீதிகள் குறித்து வாய்திறந்து பேசுங்கள் மோடி என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.

ஆங்கில நாளிதழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:உன்னவ் பலாத்காரம், காஷ்மீர் பலாத்காரம் ஆகிய சம்பவங்களில் பிரதமர் மோடி தன் மவுனத்தைக் கலைத்து முன்கூட்டியே கருத்துகூறி இருக்க வேண்டும்.
இதில் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனக்கு மோடி கூறிய அதே அறிவுரையான வாய் திறந்து பேசுங்கள் என்ற அறிவுரையை அவரும் பின்பற்ற வேண்டும்.

ஆனால், 8வயது சிறுமியை ஒரு கோயிலுக்குள் ஒருவாரம் வைத்திருந்து பலாத்காரம் செய்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 13-ம் தேதி இந்தச் செய்தியை நான் நாளேடுகளில் படித்தேன்.அப்போது அந்தச் சிறுமியின் பெற்றோர் கதறலைப் படிக்க நேர்ந்தது. அதில் அவர், என் குழந்தைக்கு யார் இந்து, யார் முஸ்லிம், எது நல்லது, எது கெட்டது என்றுகூடத் தெரியாது. ஆனால், என் மகளின் பரிதாப சாவுக்கு பாஜகவினர் மதச்சாயம் பூசிவிட்டனர் என்ற கூறியது வேதனை அளிக்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கின் கண்கள் கட்டப்பட்டு பார்வையற்றதாகவே இருக்கிறது.அதிகாரத்தில் இருப்பவர்கள், அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பாகும்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, தனக்குக் கீழ் இருக்கும் மாநில அரசுகளுக்கும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், சட்டம் ஒழுங்கை முறைப்படி நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.சிறுபான்மை முஸ்லிம்கள், தலித்துகள், பெண்கள் ஆகியோர் உரிய மரியாதையுடன் நடத்தப்படவேண்டும்.
இவ்வாறு மன்மோகன் சிங் பேட்டி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here