கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்! முதல் நபராக தமிழர் வேட்புமனு தாக்கல்!!

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.தமிழகத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார்.கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக‌ வருகிற மே 12-ல் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மே 15-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது.முதல் நாளில் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டினர்.
பெங்களூருவில் உள்ள‌ சாந்தி நகர் தொகுதியில் சுயேட்சையாக‌ போட்டியிடும் தமிழரான அந்தோணி சந்தோஷ் முதல் ஆளாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.கடந்த இருதினங்களாக மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையோர் சுயேச்சைகள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here