ஜிமிக்கி கம்மலுக்காக நர்ஸ் கொலை!!

சென்னை: ஜிமிக்கி கம்மலுக்காக பயிற்சி நர்ஸ் கொலை செய்யப்பட விபரம் தெரியவந்துள்ளது.
விருதாச்சலத்தை சேர்ந்த வேல்விழி, சென்னை சூளைமேட்டில் தங்கி நர்சிங் படித்து வந்தார். கடந்த 6ம் தேதியில் இருந்து அவர் மாயமானதாக தந்தை ராஜேந்திரன் போலீசில் புகார் செய்தார்.வேல்விழியுடன் தங்கியிருந்த மகாலட்சுமியின் கணவர் அஜித்குமார் மீது போலீசுக்கு சந்தேகம் எழுந்தது.
போலீசார் அவரை விசாரித்ததில் வேல்விழியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
வேலையின்றி திரிந்துவரும் அஜித்குமார் மனைவியிடம் அதனை மறைத்துள்ளார்.
சம்பளப்பணம் தருவதற்கு நாள் நெருங்கவே வேல்விழியிடம் பணம் உதவிகேட்டுள்ளார்.

அதற்கு வேல்விழி மறுத்துள்ளார். அவரை கொன்று அவரது ஜிமிக்கி, கம்மல், செயினை கைப்பற்றினார். உடலை கோயம்பேட்டில் டெலிபோன் கேபிள் உருளையில் மறைத்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் வேல்விழி உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here