ஆளுநர் பகிரங்க மன்னிப்பு! ஏற்றுக்கொண்டாரா பெண் நிருபர்?!

சென்னை:ராஜ்பவனில் பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தட்டிய ஆளுநர் மன்னிப்பு கோரியுள்ளார். அதனை ஏற்க மனம் மறுக்கிறது என்று பத்திரிகையாளர் தெரிவித்தார்.
பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் குற்றம் செய்ய அழைப்பு விடுத்துள்ள ஆடியோ வெளியானது.அந்த சர்ச்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெயரும் அடிபட்டது.
அதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்ட ஆளுநர் பத்திரிகையாளர்களை செவ்வாய் மாலை சந்தித்தார்.
சந்திப்பின் முடிவில், தி வீக் பத்திரிகையின் சிறப்பு செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியம் சிறப்பாக கேள்விகள் கேட்டார் என்று அவர் கன்னத்தில் செல்லமாக தட்டினார்.இதனை படத்துடன் வெளியிட்டு தனது வருத்தத்தை பதிவுசெய்திருந்தார் லட்சுமி.
எனது முகத்தை பலமுறை கழுவினேன். இருப்பினும் அச்சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து விடுபடமுடியவில்லை.

அவர் எனது தாத்தாவின் மனநிலையில் இருந்து தட்டிக்கொடுத்தாலும் என்னைப்பொறுத்தவரை அது தவறு. இவ்வாறு கருத்து பதிவுசெய்திருந்தார் பத்திரிகையாளர்.

இதற்கு ஆளுநர் அச்சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும், 40ஆண்டு பத்திரிகையாளர் பணியில் இருந்த தான் மிகச்சிறந்த கேள்விகள் கேட்ட அவரை பாராட்டும் விதமாக அவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

ஆளுநரின் வருத்தத்தை ஏற்பதாகவும், ஆனால் அவர் தனது கேள்விகளுக்கு பாராட்டும் விதமாக அவ்வாறு நடந்துகொண்டார் என்பதை ஏற்க இயலவில்லை என்றும் லட்சுமி பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here