மத்திய அரசை பிடித்தாட்டும் பணப்பேய்!

சென்னை: பணமதிப்பிழப்பு எனும் பேய் மீண்டும் வந்து மோடி அரசையும், ரிசர்வ் வங்கியையும் பிடித்து ஆட்டுகிறது என கண்டித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் வங்கி மோசடிகளால் மக்கள், வங்கி முறையின் மீதே நம்பிக்கை இழந்துவிட்டனர்.
மக்கள் பணத்தை வங்கியில் வந்து டெபாசிட் செய்ய தயங்குகிறார்கள்.பணமதிப்பிழப்பு எனும் பேய் மீண்டும மோடி அரசை பிடித்து ஆட்டத் தொடங்கி இருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 17 மாதங்களாகியும் கூட இன்னும் ஏடிஎம் மையங்கள் ஏன் காலியாகக் கிடக்கின்றன.
2000 ரூபாய் நோட்டுகளை சில பெரும் பணமுதலைகள், பதுக்கல்காரர்கள் பதுக்கிவிட்டனர்.  2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என்பது பெரும் பதுக்கல்காரர்களுக்கு உதவுவதற்குதான்.நாட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறுவது மனநிறைவை அளிக்கவில்லை.
பணப்பற்றாக்குறை குறித்து ரிசர்வ்வங்கி விளக்கம் அளிக்க வேண்டும்.

பணமதிப்பிழப்பு தடைக்குபின், பணப்புழக்கம் என்பது 2.75 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் சீரான அளவில் பணப்புழக்கத்தை கொண்டுவர அனுமதிக்கவில்லை.
பணப்புழக்கத்தை திடீரென ஒட்டுமொத்தமாகக் குறைத்து டிஜிட்டல்முறையை கொண்டுவரமுடியாது.  இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here