சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது! தியேட்டரில் படம்பார்க்க கட்டணம் ரூ.150!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்ச சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.150ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அரசுடன் நடைபெற்ற தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தது.புதன்கிழமை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,வருகிற 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் புதுப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும்.
முதலில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ள ‘மெர்க்குரி’ படமும், இன்னும் இரண்டு சிறிய படங்களும் ரிலீஸாகும். வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்புகளும் தொடங்கும்.

தமிழ் திரைத்துறை, ஜூன் முதல் முழுவதும் கணினி மயமாக்கப்படும்.
எங்குமே 150 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்பட மாட்டாது. அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்திற்கு மேல் வாங்குகிறார்களா எனவும் கண்காணிக்கப்படும்.
சினிமா டிக்கெட் விற்பனை இணையதளத்தை, தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி நடத்தும். இவ்வாறு விஷால் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here