கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.20ஆயிரம் கோடி வரிச்சலுகை!!

மும்பை: மத்திய அரசு ரூ.20ஆயிரம் கோடி அளவுக்கு கிரிக்கெட் வாரியத்துக்கு வரிச்சலுகை அளித்துள்ளது.
மத்திய சட்டவாரியம் அளித்துள்ள அறிக்கை ஒன்றில் இவ்விபரம் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது.
இந்திய அரசின் அங்கமாகவே அந்த அமைப்பு செயல்படுகிறது. அரசு விருதுகளுக்கு வீரர்களை பரிந்துரைக்கிறது. பிசிசிஐ அமைப்பில் அரசியல்வாதிகள் தலைவர்களாக உள்ளனர்.1997முதல் 2007வரை ரூ.21 ஆயிரம் கோடி வரிச்சலுகையை பிசிசிஐ பெற்றுள்ளது.
வரிச்சலுகைகள் மட்டுமின்றி மானியங்கள், தள்ளுபடிகள், குறைந்த விலையில் நிலங்கள், உள்ளிட்ட பல சலுகைகளை பிசிசிஐ அரசிடமிருந்து அனுபவித்துவருகிறது.

எனவே 90ஆண்டு பழமையான அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியம் முறையான அரசு அமைப்பாக அறிவிக்கப்படவேண்டும்.
அதனை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். இவ்வாறு மத்திய அரசுக்கு சட்டவாரியம் பரிந்துரை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here