புது கரன்சிகள் எங்கே போச்சு?! நாடு முழுவதும் ஏடிஎம்கள் முடக்கம்!!

மும்பை: நாடுமுழுவதும் ரூ.2000, ரூ.500, ரூ.200 கரன்சிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
பணம் வாபஸ் திட்டத்தின் போது ஏடிஎம்களில் காணப்பட்ட வறட்சிநிலை தற்போதும் தொடர்ந்து வருகிறது.டெல்லி, ஐதராபாத், போபால், வாரணாசி, தமிழ்நாடு உள்ளிட்ட பல நகரங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வதோரா பகுதியில் பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்களில் சேவை இல்லை என கூறி மூடப்பட்டுள்ளன.
ஒரு ஏடிஎம்மில் மட்டும் பணம் எடுக்க முடியும் அதுவும் பத்தாயிரத்திற்கு மேல்தான் எடுக்க முடியும் இதற்கும் ஏகப்பட்ட கூட்டம் அலை மோதுகிறது.

தலைநகர் டெல்லியிலும் பெரும்பலான ஏடிஎம் இயந்திரங்கள் இயங்கவில்லை,
போபால் நகரங்களில் உள்ள வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரூபாய் நோட்டுகள் அளிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். ஏ.டி.எம் குறித்த புகாரையும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரூ.2ஆயிரம் பணத்தட்டுப்பாடு குறித்து மத்தியப்பிரதேச முதல்வர் சவுகான் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
தெலங்கானா அமைச்சர் தாரக ராமாராவ் தங்கள் மாநிலத்தில் 3மாதங்களாக கரன்சி தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

பணம் தேவையான அளவு இருப்பதாக தெரிவித்துள்ளார் மத்திய நிதித்துறை இணை மந்திரி எஸ்.பி. சுக்லா.ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னை 3 நாட்களுக்குள் சரியாகும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here