என்.டி.ஆர். வாரிசுகளுக்கு அதிர்ச்சி தந்த நடிகை!

ஹைதராபாத்: மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ராமராவ் வேடத்தில் அவரது மகன் என்டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

கதாநாயகி வேடத்துக்கு ஸ்ரீதேவி, தீபிகாபடுகோன், வித்யாபாலன் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.பாலகிருஷ்ணா குடும்பத்தினர் அனைவரும் வித்யாபாலனை தேர்வு செய்தனர்.

என்.டி.ராம்ராவ் மனைவியாக நடிக்க வித்யாபாலனிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. முதலில் தயங்கிய அவர் கதை கேட்டபிறகு நடிப்பதாக ஒப்புக் கொண்டார். பின்னர் கால்ஷீட் தராமால் தாமதப்படுத்தி வந்தார்.

 

கால்ஷீட் தாமதபடுத்துவதற்கான காரணத்தை படக்குழுவினர் கேட்டனர் . படத்தில் என்டிஆர் மனைவியாக நடிக்க சம்மதம். தான் எந்தெந்த காட்சிகளில் நடிக்கிறேனோ அதை எதையும் எடிட்டிங் என்ற பெயரில் வெட்டிக் கூடாது.நடிக்கும் அத்தனை காட்சிகளும் திரையில் இடம்பெற வேண்டும் என உறுதியை அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டு எழுதித்தர வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருக்கிறார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here