தீயசக்திகள்! புலிகேசி கொதிக்கிறார்!!

சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தயாரானது.
அதில் வடிவேலு கதாநாயகனாக நடிக்க இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிவந்தார்.
திரைக்கதையில் தலையிடுகிறார், காஸ்ட்யூமில் பிரச்சனை செய்கிறார் என்று வடிவேலு மீது நடிகர்சங்கத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு வடிவேலு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.அதில், இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை 2016 டிசம்பரில் முடிப்பதாக கூறி இழுத்தடித்தனர்.
என்னால் பிறபடங்களில் நடிக்க முடியவில்லை. எனது ஆடைவடிவமைப்பாளரையும் நீக்கினர்.
இருப்பினும் பல தேதிகளில் அப்படத்தில் நடித்துக்கொடுத்துள்ளேன்.

தீயநோக்கத்துடன் இப்படத்தால்தான் சினிமா உலகில் எனக்கு புகழ் ஏற்பட்டதுபோன்ற மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கின்றனர்.
நான் வேறுபடங்களை தவிர்த்ததால் பொருள் இழப்பு, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
தற்போது பிறபடங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன். இவ்வாறு வடிவேலு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here