சவுதி அரேபியாவில் பயங்கரம்! வேலைக்கார பெண் தாக்கி குழந்தை பலி!

சவுதிஅரேபியா: வெளிநாட்டு வேலைக்கார பெண் தாக்கியதில் ஒருவயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
சவுதிஅரேபியாவில் உள்ள அல் கர்ஜ் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் அல்ஹன்ஜி.

கடந்த சனிக்கிழமை 11மாத குழந்தையை வீட்டில் வேலைபார்த்து வந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த பெண்ணின் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியே சென்றிருந்தார்.
அவர் மனைவியும் பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பினார்.
அப்போது குழந்தையையும், வேலைக்கார பெண்ணையும் தொடர்புகொண்டார். பயனில்லை. இதனால் வீடு முழுவதும் குழந்தையை தேடினார்.

வீட்டின் பால்கனி போன்ற பகுதியில் லாண்டரி கூடையில் அவரது மகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்தார்.
உடனடியாக காலித் அருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கிங் சாவுத் மருத்துவ நகருக்கு குழந்தை எடுத்துச்செல்லப்பட்டது.இரு தினங்கள் அங்கிருந்த குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மூளையில் ரத்தக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளது.
இதுகுறித்து எத்தியோப்பியா தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேலைக்காரப் பெண்ணை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here