தலித் வாலிபரை தோளில் சுமந்து ஆலயப்பிரவேசம்!

தெலங்கானா: ஜியாகுடா ரங்கனாதர்கோவிலில் தலித் இளைஞரை தோளில் சுமந்து கோவிலுக்குள் அழைத்து சென்றுள்ளார் கோவில் நிர்வாகி.
வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய குருவாக விளங்கிய ராமானுஜர் ஜாதிமறுப்பு கொள்கை உடையவர்.வைஷ்ணவத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றுவோர் யாராக இருந்தாலும் அவர் வைஷ்ணவர் என்று கூறிவந்தவர்.
அதனை நடைமுறையில் தெரிவிக்கும்வகையில் தாழ்ந்த குலத்தில் பிறந்த தனது சிஷ்யரின் தோளில் கைபோட்டவாறே காவிரியில் குளித்துவருவது அவர் வழக்கம்.இறைவனின் கட்டளைப்படி பாணர் ஒருவரை கோவில் அர்ச்சகரை தூக்கிவரச்செய்த பெருமாள், அவருக்கு விஸ்வரூபதரிசனம் கொடுத்தார். அப்பாணர் திருப்பாணாழ்வாராக ஆழ்வார்கள் வரிசையில் இடம்பெற்றார்.

இதனை நினைவுகூறும் வகையில், ராமானுஜரின் 1001வது அவதார தினத்தில் தலித் வாலிபர் ஆதித்ய பராஸ்ரியை தனது தோளில் சுமந்து ஆலயப்பிரவேசம் நடத்தினார் ரங்கராஜன்.
60வயதான ரங்கராஜன் வேத அறிஞர் ஆவார். ஜியாகுடா ரங்கனாதர்கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here