பேராசிரியை ஆடியோ! சந்தானம் தான் விசாரிப்பார் என்று ஆளுநர் உறுதி!!

சென்னை:நிர்மலாதேவி விவகாரம் குறித்து தான் நியமித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் விசாரித்து அறிக்கை அளிப்பார். அவருக்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளது. என்றுதெரிவித்துள்ளார்.கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி,  மாணவிகளை பாலியல் குற்றம் செய்யத்தூண்டும் வகையில் பேசிய ஆடியோ வெளியானது. அவர் கைதானார்.  அதில் பல்கலைக்கழகங்களின் உயர் பதவியில் இருப்பவர் பெயரும் அடிபட்டது. இந்நிலையில் ராஜ்பவனில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அவர் கூறியதாவது:நிர்மலாதேவி விவகாரம் குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ்அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திறமையானவர். அவர் விசாரணையின் மீது எனக்கும் முழு நம்பிக்கை உள்ளது.
விசாரணை அறிக்கை வந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.விசாரணை கமிஷனை நியமிக்க அரசையோ, அமைச்சர்களையோ கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சட்டப்படி, எனக்கான அதிகாரங்கள் அடிப்படையில் இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். என்னை சந்தேகிப்பது சரியல்ல. என்மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கிறேன்.எனது பதவிக்காலத்தில் தமிழகத்தில் 5 பல்கலை துணைவேந்தர்களை நியமித்துள்ளேன்.
3பேர் தமிழகத்தை சேர்ந்தவர். ஒருவர் ஆந்திரா, ஒருவர் கர்நாடகாவை சேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறியியல் கல்வி அனுபவ பின்னணி உள்ளவரை நியமித்தேன்.காவிரி விவகாரம் எனது இதயத்தில் உள்ளது. ஒவ்வொரு முறை டெல்லி செல்லும்போதும் அதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
இன்றுகூட மத்திய அமைச்சர் நிதின்கட்காரியுடன் பேசினேன்.
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் பேட்டியளித்தார்.                                              உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண்களிடம் விசாரிக்க பெண்கள் நியமிக்கப்படவேண்டுமே என்ற கேள்விக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here