மனைவிக்கு கோவில்கட்டி பூஜை செய்துவரும் விவசாயி!

பெங்களூர்:மும்தாஜூக்காக ஷாஜஹான் கட்டியது போன்று மனைவிக்காக கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார் விவசாயி ஒருவர்.
கர்நாடக மாநிலம் எல்லந்தூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜம்மா கோவில்.
ராஜம்மா அக்கிராமத்துக்கு திருமணமாகி கணவருடன் குடியேறிய பெண்.
பத்து ஆண்டுகளுக்கு முன் அக்கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவர் ராஜம்மாவை திருமணம் செய்துகொண்டார்.அவரது திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் இக்கிராமத்துக்கு வந்து தங்கிவேலைபார்த்துவந்தனர்.
ராஜம்மா அக்கிராமத்தில் ஒரு கோவில் கட்டவேண்டுமென்று தொடர்ந்து கணவரிடம் வலியுறுத்தி வந்தார்.
சிவன் கோவில் கட்ட முடிவெடுத்து தம்பதிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.
கோவில் பணிகள் முடிவடையும் தருவாயில் ராஜம்மா இறந்தார்.

மனைவியின் சிற்பத்தை தானே வடிவமைத்த ராஜூ, அதனை கோவிலுக்குள் வைத்து வழிபட தொடங்கினார்.
தினமும் அபிஷேகம், ஆராதனை என்று ராஜம்மாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக செய்துவருகிறார் ராஜூ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here