கேபிள் டிவி சேவையில் இறங்குகிறது ஜியோ!

மும்பை:4ஜி சேவையில் இந்தியாவின் முதல் நிறுவனமாக விளங்கும் ஜியோ, கேபிள் டிவி சேவையை துவக்குகிறது.
ஜியோ ஹோம் டிவி என்ற பெயரில் இச்சேவை துவக்கப்படுகிறது.இச்சேவை டிடிஹெச் சேவையில் மிகப்பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

ஜியோ ஹோம் டிவியில் இருவித மாதாந்திர கட்டணங்களுடன் சேவைகள் கிடைக்கும்.
சாதாரண சேனல்கள் ரூ.200க்கும், ஹெச்டி தரத்திலான சேனல்கள் ரூ.400க்கும் பார்க்கலாம்.

இதற்காக ஜியோ ப்ராட்காஸ்ட் ஆப்-ஐ மேம்படுத்தும் முயற்சியில் ஜியோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஈஎம்.பி.எம்.எஸ். என்ற தொழில்நுட்பத்தை இதற்காக பயன்படுத்த உள்ளது.
அதன் சோதனை ஓட்டம் தற்போது நடந்துவருகிறது.
கோடை முடிவதற்குள் இத்தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டுவந்துவிடவேண்டும் என்று தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here