காவிரி வாரியம் வலியுறுத்தி பிணத்துடன் போராட்டம்!

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் எரியும் பிணத்திற்கு அருகே விவசாயிகள் படுத்து நூதன போராட்டம் நடத்தினார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடை பெற்று வருகின்றன.தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி காவிரி ஆற்றின் அருகில் உள்ள ஓயாமாரி சுடுகாட்டிற்குள் நுழைந்தனர்.
அங்கு ஒரு உடல் எரியூட்டப்பட்டு கொண்டிருந்தது. அதனருகில் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கழுத்தில் மாலையுடன் பிணங்களை போல படுத்தனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வருவதோடு மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து விவசாயிகள் நிலையும் உயிர் அற்றவர்கள் போன்று ஆகிவிட்டதை உணர்த்தவே எரியும் பிணத்துடன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விவசாயிகளை சுடுகாட்டில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். அப்போது விவசாயிகள் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here