பேஸ்புக்கில் போலி லைக்! பத்வா விடுத்தார் மதகுரு!!

எகிப்து:பேஸ்புக்கில் செயற்கையாக லைக் செய்வது முஸ்லிம் மத கொள்கைக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார் மதகுரு ஒருவர்.
எகிப்து நாட்டை சேர்ந்த மதகுரு கிராண்ட் முப்தி சவ்கி அல்லம்.

இவர் இதுதொடர்பாக பத்வா ஒன்றையும் விடுத்துள்ளார்.
பேஸ்புக்கில் லைக் வாங்குவது, லைக் கொடுப்பது போன்றவை தவறானவை.
அது ஏமாற்றும் செயலும், மோசடி செய்வதை போன்றதும் ஆகும்.
எனவே அதனை தவிர்க்க வேண்டும் என்றும் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.முகநூல் பதிவுகள் தாமாகவே இயந்திரங்களால் இடப்படுகின்றன.
அவை உண்மையான தன்மையை பிரதிபலிப்பதில்லை. இதுபோன்ற மோசடியை எப்படி அனுமதிக்க முடியும்.
பல பதிவுகள் தேவையற்ற முறையில் பிரபலப்படுத்துவதற்காக லைக்குகள் இடப்படுகின்றன. இதனை ஏற்கமுடியாது. அதேநேரம் உண்மையான நபர்கள் லைக் செய்வதை ஏற்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் பிட்காயின்கள் உள்ளிட்ட க்ரிப்டோ கரன்சிகளை ஏற்க முடியாதென அவற்றுக்கும் இவர் பத்வா விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here