வரதட்சணை கொடுமை திடுக் விடியோ! மின்விசிறியில் கட்டிவைத்து பெண் சித்ரவதை!!

ஷாஜகான்பூர்: வரதட்சணைக்காக மனைவி மின்விசிறியில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தப்படும் விடியோ வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
பெண் ஒருவர் துப்பட்டாவால் வீட்டில் தொங்கும் மின்விசிறியில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார்.அவரை ஒருநபர் அடித்து காயப்படுத்துகிறார். கட்டித்தொங்கும் அப்பெண்மணி மயக்கமாக உள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், அப்பெண்ணின் கணவர் ரூ.50ஆயிரம் பணத்துக்காக மனைவியை சீலிங் பேனில் கட்டிவைத்து பெல்டால் காயப்படுத்தியுள்ளார்.

அதனை படம்பிடித்து மனைவியின் குடும்பத்தினருக்கு அனுப்பி பணம் தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளார்.
அந்த விடியோ தற்போது மாவட்டம் முழுவதும் பரவியது. அதனைப்பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அப்பெண்மணி சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் 4பேர் மீது வழக்குப்பதிவுசெய்து தேடிவருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here