பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் சதா!

சென்னை: டார்ச் லைட் திரைப்படத்தில் நடிகை சதா பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இந்த படத்தை விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்குகிறார்.கான்ஃபிடன்ட் ஃபிலிம் கேஃப் நிறுவனம், ஆர்.கே. ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் என்டர்டெய்ன்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.அப்துல் மஜீத் இது குறித்து பேசியபோது நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறியபோதுபாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டும் என பலரும் மறுத்து விட்டனர். 40 பேரிடம் இந்த படத்தின் கதையைசொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன்.கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோ பதிவுகளை எல்லாம் பார்த்து கலங்கினார். தானே நடிப்பதாகக் கூறினார். இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here