ரூ.2000 நோட்டுகள் மாயம்! பாஜக முதல்வர் திடுக் தகவல்!!

போபால்:நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகள் அனைத்தும் மாயமாகி வருவதாக பாஜக முதல்வர் சிவராஜ் சவுகான் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.ஷாஜாபூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவருவதற்கு முன், மொத்தம் ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து முடிந்தபின், ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.ஆனால், மத்திய அரசு புழக்கத்தில் விட்ட 2000 நோட்டுகளைச் சமீபகாலமாக பார்க்க முடியவில்லை.  சந்தையில் இருந்தே மறைந்துவிட்டது. நம் மாநிலத்தில் பல்வேறு ஏடிஎம் மையங்கள் பணமின்றி பூட்டிக்கிடக்கின்றன.புழக்கத்துக்கு பணமில்லாமல் செய்ய ஏதோ சதி நடப்பதாக சந்தேகிக்கின்றேன்.
ரூ.2ஆயிரம் நோட்டுகள் பதுக்கப்பட்டு பிரச்சனைகள் நடத்த திட்டமிடுவதாக தெரிகிறது.
மத்திய அரசிடம் பிரச்சனையை கொண்டுசென்று பணத்தட்டுப்பாட்டை நீக்குவேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here