Connect with us

Cinema

சினிமாவுக்கு நானும் ரெடி! குஷியின் மாடலிங் புகைப்படங்கள்!

Published

on

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷியின் லேட்டஸ்ட் மாடலிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை ஸ்ரீதேவி போனிகபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்த மகள் ஜான்விகபூர் இவர் தற்போது தடக் என்ற பாலிவுட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இப்படம் வெளியாவதற்குள் ஸ்ரீதேவி இறந்துவிட்டார்.இரண்டாவது மகள் குஷிகபூர் பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட சர்வதேச மாடலாக வலம் வருவதே அவருடைய விருப்பமாக இருந்துள்ளது. மாடலிங் துறைக்கு செல்ல விரும்பும் குஷி அதற்கான சில புகைப்படங்கள் எடுத்துள்ளார்.இப்புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மாடலிங்கிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த கவர்ச்சி படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இவரும் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டது போல் தெரிகிறது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator