பிரதமர் வெளிநாடு பயணம்! தொகாடியா கடும் விமர்சனம்!!

மும்பை: பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விளாசியுள்ளார் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா.விஎச்பி அமைப்பில் 30ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் பிரவீன் தொகாடியா.
அந்த அமைப்பின் சர்வதேச தலைவர் தேர்தலில் தொகாடியாவின் ஆதரவாளர் தோற்கடிக்கப்பட்டார்.இதனால் விரக்தியில் அந்த அமைப்பில் இருந்து தொகாடியா வெளியேறினார்.
இந்நிலையில், மோடியின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் அவர். அஹமதாபாத்தில் அவரளித்த பேட்டி:நம்முடைய ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இல்லை.
விவசாயிகள் வறுமை, கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகின்றனர்.
நமது மகள்கள் நாட்டில் பாதுகாப்பாக இல்லை ஆனால், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பிரதமர் மோடி வெளிநாட்டுக்குப் புறப்பட்டுவிட்டார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here