மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு! நீதிபதி திடீர் ராஜினாமா!!

ஹைதராபாத்: மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்புவழங்கிய நீதிபதி ரவீந்திரரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது நீதித்துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத் மெக்கா மசூதியில் 2007 மே18ல் குண்டுவெடித்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது.
இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் கைதானார்கள்.ஹைதராபாத் நாம்பள்ளியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
231 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன, 400-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதி ரவீந்திர ரெட்டி இன்று தீர்ப்பளித்தார்.அதில் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை,
குற்றத்தை நிரூபிக்க தேசிய புலனாய்வு அமைப்பு தவறிவிட்டது என்று கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.தீர்ப்பு அளித்த சில மணிநேரங்களில் நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை மாவட்ட நீதிபதிக்கும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பிவைத்தார்.என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவே நான் எனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறேன்.
நான் வழங்கிய தீர்ப்புக்கும், இந்த ராஜினாமாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here