800வயது ஆலமரத்தை காப்பாற்றுமா குளுகோஸ்?!

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் 800வயதான மரத்துக்கு குளுக்கோஸ் கொடுத்து துளிர்க்கவைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மகபூப்நகரில் வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா ஆராய்ச்சி மையம் உள்ளது.

3.5ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இம்மையத்தில் அரியவகை தாவரங்கள் உள்ளன.
அங்கு 800 வயது ஆலமரம் ஒன்று உள்ளது. சமீபமாக அம்மரம் பட்டுப்போகும் நிலையில் உள்ளது.
உலர்ந்த அதன் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுகின்றன.

இதனால் மரத்தை துளிர்க்கவைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மரத்தின் கிளைகளில் அரித்துள்ள பூஞ்சைக்காளான்களை அகற்ற வேதிப்பொருள் பூசப்படுகிறது.
கிளைகள் விழாதவண்ணம் முட்டுக்கொடுத்து சுவர் அமைக்கப்படுகிறது.மரத்தில் ஆங்காங்கே சுமார் 60இடங்களில் குளுகோஸ் பாட்டில்கள் கட்டப்பட்டு மரத்துக்குள் குளுகோஸ் திரவம் செலுத்தப்படுகிறது.

கடந்த 3தினங்கள் இம்முறையை மேற்கொண்டு வருகிறோம். ஒருவாரத்தில் பலன் தரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here