மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுவிப்பு! ஓவைசி கடும் கண்டனம்!!

ஹைதராபாத்: 2007ல் நடைபெற்ற மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சார்மினாருக்கு அருகில் மெக்கா மசூதியில், 2007, மே 18ல் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 9பேர் இறந்தனர். 58 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதல் வழக்கில், அசிமானந்த், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளான தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருவர் தப்பிய நிலையில் 5 பேர் மீதான வழக்கு ஹைதராபாத் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என கூறி நீதிமன்றம் அனைவரையம் விடுதலை செய்தது.

இத்தீர்ப்பு குறித்து மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி கூறுகையில், இது ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு என்றார்.
இவ்வழக்கில் பெயில் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவில்லை. தேசிய புலனாய்வு அமைப்பு பார்வையற்றும், பேசமுடியாமலும் இயங்கிவருகிறது.
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போர் பலவீனமடைந்துவிட்டதை இத்தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here