காவியின் தூதுவர் ரஜினிகாந்த்! பாரதிராஜா கடும் கண்டனம்!!

சென்னை:ரஜினிகாந்த் தமிழர் அல்ல; கர்நாடகா காவியின் தூதுவர் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிக்கு தடைகோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில் போலீசாரை நாம் தமிழர் அமைப்பை சேர்ந்த ஒருவர் தாக்கினார்.
அதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அப்போராட்டத்துக்கு தலைமை வகித்த இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கை:

காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா?

தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது.  ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது.இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்? தமிழர்களுக்குள் ரஜினிகாந்த் சிண்டுமுடிய வேண்டாம்.
தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள். உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது.
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here