சீட் கிடைக்கவில்லை! பாஜக பிரமுகர் கதறல்!!

பெங்களூர்: பாஜகவுக்காக உழைத்த நான் புறக்கணிக்கப்பட்டுவிட்டேன் என்று கதறி அழுதார் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. சஷில்நமோசி.கல்புர்கி வடக்கு தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார் நமோசி.  முதல் பட்டியலில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தார்.   அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகா பாஜக வேட்பாளர்களின் 2வது பட்டியல் இன்று வெளியானது. 82வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.   அதில் கல்புர்கி வடக்கு தொகுதியில் சந்திரகாந்த் பாட்டீல் பெயர் இடம்பெற்றிருந்தது.

 

இதனைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்தார் சஷில்நமோசி.  பத்திரிகையாளர்களிடம் பேசமுடியாமல் குலுங்கி குலுங்கி அழுதார்.    நான் இதுவரை யாருக்கும் துரோகம் செய்ததில்லை.  என் மீது மக்கள் மிகவும் அன்பு வைத்துள்ளனர்.  கட்சி மேலிடம் எனது பெயரை பரிசீலித்து வருகிறது. அடுத்த பட்டியலில் பெயர் அறிவிப்பு வெளியாகும் என்று நெருக்கமான தலைவர்கள் கூறினர். ஆனால், ஏமாற்றப்பட்டேன். கட்சிக்கும், தலைவர்களுக்கும் 1992ல் இருந்து விசுவாசமாக இருந்த எனக்கு கொடுக்கும் பரிசு இதுதானா? என்று அவர் அழுகைக்கு இடையே பொரிந்து தள்ளினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here