ஆம்புலன்சில் டீசல் இல்லை! நோயாளியை கட்டிலில் தூக்கி சென்ற உறவினர்கள்!!

உத்திரப்பிரதேசம்: ஆம்புலன்சில் டீசல் இல்லை என கூறி வர மறுத்ததால் பெண் நோயாளியை உறவினர்கள் கட்டிலில்தூக்கிச்சென்ற அவலம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.உத்திரபிரதேசம் ஷாஜஹான்பூரில் உள்ள பெத்பூர் கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டிபெண் மஞ்சித் கவுர். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்க 108 ஆம்புலன்ஸிற்கு உறவினர்கள் போன் செய்துள்ளனர்.
டீசல் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் வராது என டிரைவர் தெரிவித்துள்ளனர்.
குடும்ப உறவினர்கள் உதவியுடன் மூதாட்டி கவுரை கட்டிலில் தூக்கி கொண்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதோடு முடியாமல் மருத்துவ மனைக்கு சென்றவுடன் நோயளியை கொண்டு செல்ல ஸ்ட்ரக்சர் வழங்குமாறு கேட்டுள்ளனர். அதற்கும் மறுக்கப்பட்டதால் கட்டிலிலேயே மூதாட்டியை மருத்துவமனையின் அவசர பிரிவில் கொண்டு சேர்த்தனர். இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி லக்ஷ்மன் பிரசாத்திடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here