இரட்டை தலையுடன் அதிசய குழந்தை!

சோலாப்பூர்: இரு தலைகளுடன் உள்ள அபூர்வ குழந்தை அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது.
சோலாப்பூர் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சர்வோபசார் அரசு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை கர்ப்பிணிப்பெண் ஒருவர் வந்தார்.

அவருக்கு பிரசவ தேதி நெருங்கிவிட்டது என்று டாக்டர்கள் பரிசோதனையில் தெரிந்தது.  அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் இரு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
சிசேரியன் செய்து குழந்தைகளை பிரித்தெடுக்க டாக்டர்கள் திட்டமிட்டனர்.அப்பெண்ணுக்கு இரு தலைகளுடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது.
தலைகள் மட்டுமின்றி நுரையீரல், இருதயம் உணவுக்குழாய் ஆகியவையும் தனித்தனியே இருந்தன.
இது டாக்டர்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அக்குழந்தையை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here