இந்துக்கடவுளாக சித்தரிப்பு!! சர்ச்சையில் சிக்கினார் இம்ரான்கான்!

கராச்சி:முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தஹரிக்-ஈ-இன்சாப் கட்சித்தலைவருமான இம்ரான்கான் இந்துக்கடவுளாக சித்தரிக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.இம்ரான்கானின் ரசிகர்கள் என்ற பேஸ்புக் குழுமத்தில் கடந்த எட்டாம்தேதி ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இம்ரான்கான் சிவபெருமானாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.இம்ரான்கானின் எதிர்கட்சியாக விளங்கும் நவாஸ் ஷெரிப்பின் பிஎம்.எல். கட்சியையும், அதன் தலைவரையும் நாங்கள் நேசிக்கிறோம் என்ற வாசகங்களும் அப்புகைப்படத்துடன் இடம்பெற்றிருந்தன.
அரசியலில் வாழ்நாள் தடை பெற்றுள்ள நவாஸ் ஷெரிப் கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுப்பதற்காக இம்ரான்கான் இவ்வாறு செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பாகிஸ்தான் வரலாற்றில் எந்த ஒரு தலைவர்களும் இதுபோன்று தங்களை மாற்று மதத்தின் கடவுளாக சித்தரித்துக்கொண்டதில்லை.
இது மதரீதியாகவும் கண்டனத்துக்குரியது.பாகிஸ்தானில் அனைத்து மதத்தினரும் சம உரிமைபெற்றுள்ளனர். எனவே, இது பாகிஸ்தானில் வசிக்கும் இந்து மதத்தினரின் உணர்வுகளைப்புண் படுத்ஹ்டுகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
இப்படம் வெளியானது குறித்து இம்ரான்கான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் சபாநாயகர் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here