தோனி படைக்கு சோதனை மேல் சோதனை!

சண்டிகர்:சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனைமேல் சோதனையாக ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் நடைபெற்ற காவிரி போராட்டத்தால் தமிழகத்தில் விளையாட முடியாத நிலை சென்னை அணிக்கு ஏற்பட்டது.
ஞாயிறு சண்டிகரில் பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதுகிறது.காயம் காரணமாக ரெய்னா இப்போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், டூப்ளசி, நிகிடியும் இன்று பஞ்சாபுடன் மோதும் அணியில் இடம்பெறவில்லை.
தந்தை இறந்ததால் இறுதிச்சடங்கில் பங்கேற்க நிகிடி தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டார்.
கைவிரல் காயத்தால் டூப்ளசியும் களம் இறங்கவில்லை.

சுரேஷ் ரெய்னா இல்லாமல் சென்னை சூப்பர்கிங்ஸ் களமிறங்குவது இதுவே முதல்முறை.
கடந்த 2போட்டிகளிலும் வென்ற சென்னை இந்தமுறை உற்சாக குறைவுடனே களம் இறங்குகிறது.டெல்லியை சுருட்டி, பெங்களூரால் வாரப்பட்ட பஞ்சாப் அணி சென்னையை வெல்லவேண்டும் என்று தீவிரமுடன் களம் காண்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here