கட்சியில்லை….கோஷமில்லை…..! மக்களுக்கு உதவ மனமிருந்தால் போதும்!!

மும்பை:மக்களுக்கு உதவி செய்ய சிஸ்டம் சரியில்லை என்று கூறவேண்டாம், தனிக்கட்சி துவங்க வேண்டாம், அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டாம் என்று உதாரண புருஷராக நடந்துகொண்டுள்ளார் நடிகர் அக்‌ஷய் குமார். 

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய்குமார். ரஜினிகாந்துடன் இணைந்து 2.0படத்தில் நடிக்கிறார்.
சமூக பிரச்சனைகளை அலசி மேம்பாட்டுக்கான கருத்துக்களை தனது படத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பெண்களின் சானிடரிநாப்கின் பிரச்சனையை பேசுகிறது இவரது சமீபத்திய படம் பேட்மென். தற்போது கேசரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தின் ஷூட்டிங் சடாரா என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் நடந்து வருகிறது.
அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை இருப்பது நடிகருக்கு தெரியவந்தது.
கிராம மக்களுக்கு உதவிசெய்யும் வகையில் ரூ.25லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
அவர் தலைமையில் தங்கள் கிராமத்தில் குளம்வெட்டவேண்டும் என்று மக்கள் விரும்பினர்.அதற்கான விழாவில் பங்கேற்ற அக்‌ஷய்குமார், மம்பட்டியுடன் குளம்வெட்டும் பணியில் ஈடுபட்டார். விழாவில் பேசிய அவர், நாங்கள் சாப்பிடுவதற்கு நீங்கள் வியர்வைச் சிந்தி உழைத்துவருகிறீர்கள்.
அதனால் உங்கள் கண்களில் நீர் வருவதை என்னால் பார்க்க முடியவில்லை.
குழாய்களில் நீர் வருவதைத்தான் பார்க்க விரும்புகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here