தவறான வழியில் சென்ற அரசியல் பிரமுகரின் ஹெலிகாப்டர்!

சிந்த்வாரா: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாராவிலிருந்து ஜோதேஷ்வர் பகுதியில் உள்ள சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சுவாமியிடம் ஆசிபெறுவதற்காகஹெலிகாப்டரில் சென்றார்.இவருடன் முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பச்சோரியும் சென்றார்.ஹெலிகாப்டரை இயக்கியவர் வழித்தடத்தை தவறவிட்டதால் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள கோட்சா கிராமத்தில்ஹெலிகாப்டரை தரையிறக்கினார். தவறை உணர்ந்து கொண்ட விமானி ஹெலிகாப்டரை ஜோதேஷ்வருக்கு செலுத்தினார்.கமல்நாத் சென்ற ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி காலை 10.30 மணிக்கு செல்ல வேண்டும். விமானி வழி தவறியதால் சுமார் 40 நிமிடம் தாமதமாக சென்றடைந்தார். ஹெலிகாப்டர் வழிதவறி தரையிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here