பாலியல் குற்றங்கள் வெட்கக்கேடானது! மௌனம் கலைந்தார் பிரதமர் மோடி!!

டெல்லி: பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரை  சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வழிபாட்டுத்தலம் ஒன்றில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் நள்ளிரவில் மெழுகு ஏந்தி போராட்டம் நடத்தினார்.பிரதமர் இது குறித்து மௌனம் காத்ததை அனைத்து தரப்பினரும் விமர்சித்தனர்.இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் தேசிய நினைவு இல்லத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிலளித்துள்ளார்.சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிகள் எந்தக் காரணத்துக்காகவும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள். நமது நாகரிக சமுதாயத்தில் இத்தகைய பாலியல் குற்றங்கள் என்பது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here