மெர்க்குரி திரைப்படம்! மன்னிப்பு கேட்டார் கார்த்திக் சுப்புராஜ்!!

சென்னை: பிரபுதேவா முதன்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் மெர்க்குரி. வசனமே இல்லாமல் சைலண்ட் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் நடந்து வரும் வேலைநிறுத்தத்தின் காரணமாக இந்தப் படம் வெளியாகவில்லை.இந்நிலையில் இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மெர்க்குரி திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. என் படம் உலக அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.இந்தப் படம் விரைவில் தமிழகத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் என் அன்பார்ந்த தமிழ் ரசிகர்களே என்னை மன்னியுங்கள் என தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here