கோழி முட்டைகளை விழுங்கிய பாம்பு! மனிதர்களை கண்டதும் கக்கியது!!

வயநாடு: கேரளாவில் கோழி முட்டைகளை விழுங்கிய பாம்பு மனிதர்களிடம் மாட்டிக்கொண்டதால் தான் விழுங்கிய முட்டைகளை கக்கிவிட்டு வனப்பகுதிக்குள் தப்பிய காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.வயநாட்டில் கோழிகள் வளர்க்கப்படும் பண்ணை வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
பண்ணையில் இருந்த கோழியை கொன்றுவிட்டு கோழி அடைகாத்து வைத்திருந்த 8 முட்டைகளை விழுங்கியது.தகவலறிந்து வனவிலங்கு ஆர்வலர்கள் அங்கு வந்தனர். அதை தொடர்ந்து வனவிலங்கு ஆர்வலர்கள் பாம்பை பிடித்தனர். மனிதர்கள் சுற்றியிருப்பதை பார்த்த பாம்பு தான் விழுங்கிய கோழி முட்டைகளில்
7 முட்டைகளை கக்கி விட்டு அங்கிருந்து புதருக்குள் ஓடி மறைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here