தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம்!

சென்னை: சுவையும், மணமும், ஊட்டச்சத்தும் நிறைந்த அன்னாசிப்பழம்
தொப்பையைக் குறைக்கும் சக்தியையும் கொண்டது.அன்னாசிப்பழத்தில் 85 சதவீதம் நீர்சத்து உள்ளது. 13 சதவீத சர்க்கரையும், புரதசத்து, நார்ச்த்து, தாது உப்புகள், இரும்புச்சத்து, உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.
அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால் தொப்பை பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இன்றைய இளைஞர்கள், பெண்களிடையே தொப்பை பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் பெண்கள், ஆண்களின் அழகான தோற்றம் மாறிவிடுகிறது. தொப்பையை குறைக்க ஓரு அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி ஓமத்தம் பொடியை அதனுடன் சேர்க்கவும்.ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் அன்னாசிப்பழம் ஓமத்தம் கலவையை சேர்ந்து கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.கர்ப்பிணிகள் இப்பழத்தை தவிர்க்க வேண்டும். அன்னாசிப்பழம் மஞ்சள் காமாலை, சீதபேதி, பித்தம், உடல்வலி, இடுப்புவலி, நீக்கும். சிறுநீரக கற்களை கரைத்து உடலுக்கு அழகையும் பொலிவையும் தரும்.
குழந்தைகளுக்கு அன்னாசி பழச்சாறு கொடுத்தால் நல்ல பசி ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here