ஜாமீன் வழங்க லஞ்சம்! நீதிபதி கைது!!

ஐதராபாத்: போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றவர் தத்து எம்டெக் மாணவர். இவர் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வக்கீல்கள் கே.சீனிவாசராவ், சதீஷ்குமார் ஆகியோர் மூலம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார். இதை ஏற்ற ஐதராபாத் மெட்ரோ பாலிட்டன் செசன்ஸ் கோர்ட் நீதிபதி ராதாகிருஷ்ண மூர்த்தி மாணவர் தத்துவுக்கு ஜாமீன் வழங்கினார்.லஞ்சம் பெற்றுக் கொண்டு நீதிபதி ஜாமீன் வழங்கியதாக வக்கீல் டி.ஸ்ரீரங்கா ராவ் ஆந்திர ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். இது பற்றிய விசாரணைக்கு ஊழல் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நீதிபதி ராதாகிருஷ்ண மூர்த்தி இருகட்டமாக ரூ.7.5 லட்சம் பெற்றுள்ளது தெரியவந்தது.இதற்காக தத்துவின் தாய் தனது நகைகளை அடகு வைத்து பணத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை வக்கீல்கள் சீனிவாச ராவ், சதீஷ்குமார் ஆகியோர் நீதிபதியிடம் கொடுத்துள்ளனர். நீதிபதியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.நீதிபதி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.இதையடுத்து நீதிபதி ராதாகிருஷ்ணமூர்த்தி வக்கீல்கள் சீனிவாச ராவ் சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிபதி உள்பட 3 பேரையும் வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here